யார் இந்த பிரதாப் போத்தன் ?

 தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் என்ற பெயருடன் கோலிவுட் சினிமாவில் வலம் வந்தவர் பிரதாப் போத்தன் . சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக சிகிக்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிர் இழந்தார் .


இவர் தமிழ் சினிமாவிற்கு தந்த படங்களை பற்றி காண்போம் 





மீண்டும் ஒரு காதல் கதை என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக இவர் அறிமுகமானார் . இளையராஜா இசையில் இவரே நாயகனாக நடித்து இருந்தார் . ராதிகா நாயகியாக நடித்து இருந்தார் .இந்த படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் என்ற தேசிய விருதை வென்றார்  பிரதாப் போத்தன்.


பிரதாப் போத்தன் இரண்டாவதாக இயக்கிய படம் ஜீவா . நடிகர் சத்யராஜ் நாயகனாக நடிக்க , அமலா நாயகியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் .கங்கை அமரன் இசையில் வெளியான இந்த படம் நல்ல வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது .



மூன்றாவதாக இவர் இயக்கிய படம் வெற்றி விழா . இந்த படத்தில் கமல் நாயகனாக நடிக்க , பிரபு , ராதா ரவி , குஷ்பூ , அமலா ,உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் .இளையராஜா இசையில் உருவாகி இருந்த இந்த படம் 175 நாள் திரையில் ஓடி சாதனை செய்தது .

நான்காவதாக இவர் இயக்கிய படம் மை  டியர் மார்த்தாண்டன்  . இந்த படத்தில் பிரபு நாயகனாக நடித்து இருந்தார்.குஷ்பூ படத்தின் நாயகியாக நடித்து இருந்தார் .இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .



இதனை தொடர்ந்து இவர் இயக்கிய படம் மகுடம் . சத்யராஜ் , கவுதமி , பானுப்ரியா ஆகியோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .  இதனை தொடர்ந்து  இவர் இயக்கிய படம் ஆத்மா .ராம்கி இந்த படத்தில் நாயகனாக நடித்து இருந்தார் . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது

 .


பிரதாப் போத்தன் அடுத்து இயக்கிய படம் சீவலப்பேரி பாண்டி . இந்த படத்தில் நேப்பொலியன் நாயகனாக நடித்து இருந்தார் .ஆதித்யன் இசையில் வெளியான இந்த படம் மிகப்  பெரிய வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது . இதனை தொடர்ந்து லக்கி மேன் என்ற படத்தை இயக்கினார் . தமிழில் இவர் இயக்கிய இறுதி படம் இது தான் .கார்த்தி இந்த படத்தில் நாயகனாக நடித்து இருந்தார் .சங்கவி நாயகனாக அடித்து இருந்தார் .கவுண்டமணி மற்றும் செந்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் . இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற வில்லை .



இந்த படத்தை அடுத்து படம் இயக்கவில்லை பிரதாப் போத்தன் குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் நடித்தார் . அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு சோகத்தை தந்துள்ளது .

Comments

Popular Posts