12 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் நடித்து மாபெரும் வெற்றியை பெற்று அசத்தினார் நடிகர் சூர்யா !

 கடந்த 2005-ஆம் ஆண்டு  நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் கஜினி . ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . நடிகை அசின் நாயகியாக நடித்து இருக்கு மற்றுமொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்து இருந்தார் .  இந்த படம் நடிகர் சூர்யா , நடிகை அசின் , இயக்குனர் முருகதாஸ் ஆகிய மூன்றுபேருக்கும் தங்களது திரைவாழ்க்கையில் முக்கியமான படமாய் இந்த படம் உள்ளது .



இயக்குனர் முருகதாஸ் கஜினி படத்தின் கதையை 12 நடிகர்களுக்கு கூறி இருக்கிறார் . நடிகர் அஜித் இந்த படத்தில் முதலில் நடிக்க சம்மதம் தெரிவித்து  இருந்தார் . மிரட்டல் என்கிற பெயரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது . அதன் பிறகு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார் அஜித் . பின்பு அந்த படத்தில் மாதவன் நடிப்பதாக இருந்தார் . ஆனால் அவரும் அந்த படத்தில் நடிக்காமல் போனார்.


இந்நிலையில் தான் நடிகர் சூர்யாவிடம் இந்த கதையை கூறி உள்ளார் இயக்குனர் முருகதாஸ் .நடிகர் சூர்யாவிற்கு கதை பிடித்து போக இதில் நடிக்க ஒப்புக் கொண்டார் நடிகர் சூர்யா . 7 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் புரிந்து சாதித்தது . மேலும் கஜினி படம் நடிகர் சூர்யாவிற்கு தெலுங்கு திரைப்பட உலகில் மிக பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது . பல நேரடி தெலுங்கு படங்களின் வசூலை சூர்யாவின் கஜினி படம் முறியடித்து இருந்தது . மேலும் நடிகர் அமீர் கான் இந்த படத்தை  பார்த்து விட்டு ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்து இருந்தார் .



Comments

Popular Posts