தேசிய விருதை வென்ற ஜி.வி.பிரகாஷ் !

 நடிகர் சூர்யா  நடிப்பில் கடந்த 2020-ஆம்  ஆண்டு வெளியான படம் சூரைப்போற்று . இந்த படத்தை இயக்கியவர்  சுதா கொங்கரா . அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . மிக பெரிய வரவேற்பை இந்த படம் சூர்யாவுக்கு பெற்று தந்தது . மோகன் பாபு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை  சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது . இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் வெளியானது .



இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தின் ரீமேக்கை நடிகர் சூர்யா  மற்றும் விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர்  இணைந்து தயாரிக்க உள்ளனர் . இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை  நேற்று  மும்பையில் நடந்து உள்ளது . சூர்யா  நடித்த மாறன் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கப்போவதாக அறிவிப்பு  வெளியாகி இருக்கிறது . நடிகை அபர்ணா பாலமுரளி நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடிக்க  இருக்கிறார் .



இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்  தான் இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்திற்கு புதிதாக பின்னணி இசையும் பாடலும் தயாராகி கொண்டு இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்து இருந்தார் .இந்நிலையில் 68வது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .    சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் பெறுகிறார் .

விருது பற்றின அறிவிப்பு வந்ததும் தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி கூறி பதிவிட்டுள்ளார் . அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது .









https://twitter.com/gvprakash/status/1550440508786237440?t=KeN3SKSrt5sj31ph7d0TPQ&s=08

Comments

Popular Posts