ஒரே படத்தில் சூர்யா , நானி , துல்கர் சல்மான் !!

 கடந்த 2020ம் ஆண்டு சூர்யா தயாரித்து நடித்த படம் தான் சூரரைப் போற்று. இந்த படத்தைசுதா கொங்கரா இயக்கி இருந்தாங்க .அமேசான் ஓ.டி.டியில் இந்த படம் வெளியானது . அந்த வருடத்தோட மிகப்பெரிய வெற்றியை அந்த படம் பெற்றுச்சி . ஜி .வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .


இந்த படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது . ஆஸ்கார் நாமினேஷன் வரை சென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்தது . பல வருடமாக சரியான வெற்றி படம் கொடுக்காமல் போராடிக்கொண்டு இருந்த நடிகர் சூர்யாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற படம் .


இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைந்து சூர்யா ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதினர் . அதை உறுதிப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் விரைவில் அந்த படம் தொடங்கும் என்று கூறி இருந்தார் . இந்நிலையில் இயக்குனர்  சுதா கொங்கரா சமீபத்தில் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார்  .இந்த படம் மிக  பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகவும் , உண்மை கதையை தழுவி எடுக்க உள்ளதாகவும் கூறி இருந்தார்  . மேலும் இந்த படம் சூரரைப் போற்று படத்தை காட்டிலும் கடினமாக இருக்கும் என்று கூறி இருந்தார்  .


இந்நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான்  மற்றும் தெலுங்கு நடிகர் நானி  ஆகியோர்  இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது மேலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருக்கிறது. கே.ஜி.எஃப்  படத்தை தயாரித்த நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறது . இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .







Comments

Popular Posts